தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள எஸ். புதூர் பகுதியைச் சேர்ந்த தேஜா (25), டெல்லியில் நடைபெற்ற மிஸ் யூனிவர்ஸ் மாடலிங் போட்டியில் தமிழகம் சார்பில் கலந்து கொண்டு மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

மாடலிங் துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் பயணித்து வரும் தேஜா, தனது திறமை மற்றும் தன்னம்பிக்கையால் டெல்லியில் நடைபெற்ற இந்த போட்டியில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றார். நாடு முழுவதும் இருந்து பல்வேறு மாநிலங்களை சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்ட இப்போட்டியில், தனது தனித்துவமான அணுகுமுறை, மேடை தோற்றம் மற்றும் திறமையை வெளிப்படுத்தி நடுவர்களின் கவனத்தை ஈர்த்தார்.

இதன் மூலம் மூன்றாம் இடத்தை பெற்று கும்பகோணம் பகுதியிற்கும், தஞ்சாவூர் மாவட்டத்திற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். தேஜாவின் இந்த வெற்றி அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் எஸ். புதூர் பகுதி மக்களிடையே மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மாடலிங் துறையில் மேலும் பல உயரங்களை தொட்டு சர்வதேச அளவில் சாதிக்க வேண்டும் என்பதே தேஜாவின் அடுத்தகட்ட இலக்காக அமைந்துள்ளது. அவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

கும்பகோணம் மண்ணிலிருந்து தேசிய அளவிலான மாடலிங் மேடையில் தடம் பதித்த தேஜாவுக்கு டெல்டா மலர் வார இதழின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

0
0
3
0
0
0