நடிகர் அஜித்குமார் மீண்டும் அம்பானி குழுமத்துடன் இணைந்து விளம்பரத்தில் நடிக்க உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் சினிமா ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. குறிப்பாக, பிஸ்கட் விளம்பரத்தில் அஜித்குமார் தோன்ற இருப்பதாகக் கூறப்படும் தகவல் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் கேம்பா எனர்ஜி, ஏற்கெனவே அஜித்குமார் ரேஸிங் அணியின் அதிகாரப்பூர்வ எனர்ஜி பார்ட்னராக இருந்து வருகிறது. தற்போது ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் நிறுவனத்தின் ‘இன்டிபெண்டன்ஸ் பவர் அப்’ பிஸ்கட் விளம்பரத்திலும் அஜித் குமார் ரேஸிங் அணி இணைந்துள்ளது.
இன்டிபெண்டன்ஸ் பிராண்டின் கீழ் தமிழகத்தில் 9 வகையான பிஸ்கட்டுகள், 28 புதிய தயாரிப்பு அளவுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த பிஸ்கட்டுகள் நவம்பர் 2 முதல் தமிழகத்தில் விற்பனைக்கு வந்துள்ளன. ஏற்கெனவே கேம்பா எனர்ஜி விளம்பரத்தில் அஜித் தோன்றியபோது ரசிகர்கள் மத்தியில் கலவையான கருத்துகள் எழுந்தன. தற்போது பிஸ்கட் விளம்பரத்திலும் அஜித் குமார் ரேஸிங் அணி இணைந்திருப்பது மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
