தமிழில் பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வருகிறது. இதன் வீக் எண்ட் எபிசோடில் தொகுப்பாளரும் நடிகருமான விஜய் சேதுபதி, நடிகர் சஞ்சய் குறித்து பேசிய சம்பவம் கவனம் பெற்றுள்ளது.
சஞ்சயின் பிறந்தநாளுக்கு தான் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்ததாகவும், அதன்பின்னர் சஞ்சயின் தந்தை விஜய் தனக்கு போன் செய்து நன்றி தெரிவித்ததாகவும் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
“அதை நான் எதிர்பார்க்கவே இல்லை”
இதுகுறித்து பேசிய விஜய் சேதுபதி, “சஞ்சய் பிறந்தநாளுக்கு போன் பண்ணி வாழ்த்து சொல்லியிருந்தேன். அப்போது அவர் எனக்கு போன் பண்ணி, ‘ரொம்ப நன்றி நண்பா. அவன் ரொம்ப சந்தோஷமா இருந்தான்’ என்று சொன்னார். நான் அதை எதிர்பார்க்கவே இல்லை.
அவரே ஒரு பெரிய சூப்பர் ஸ்டார். அவருடைய மகன் சஞ்சய்க்கு என்னைப் பிடித்திருக்கிறது என்பது எனக்கு பெரிய ஆச்சரியம்” என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து சஞ்சய் குறித்து பேசிய அவர், “அவன் ரொம்ப தங்கமான பையன். அவனுடைய படமும் இங்கே நம்ம படத்தோடு வருகிறது. அவன் ஷூட் பண்ணும்போது நான் அவனுடைய செட்டுக்குப் போயிருந்தேன். எனக்கு அவனை ரொம்ப பிடிக்கும். ரொம்ப கியூட் ஃபெல்லோ” என்று கூறியுள்ளார்.
மேலும், சஞ்சயின் படப்பிடிப்பு தளத்துக்கு தான் சென்றிருந்தபோது, தனது நண்பர் ரோகனிடம் சஞ்சய் அன்பாக நடந்து கொண்டதாகவும் விஜய் சேதுபதி குறிப்பிட்டுள்ளார்.
சஞ்சயின் பிறந்தநாள் வாழ்த்துக்கு விஜய் தொலைபேசியில் நன்றி தெரிவித்ததாக விஜய் சேதுபதி பேசியுள்ள இந்தக் கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன.
