Bigg Boss Controversy: பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி, முதல்வர் விஜய்யை மறைமுகமாக விமர்சித்ததாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், காமெடி நடிகர் கூல் சுரேஷ் விஜய் சேதுபதிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் லீடர்ஷிப் குறித்து பேசிய விஜய் சேதுபதி, பொறுப்புகள் மற்றும் பிரச்சினைகள் வரும்போது எதிரணியைக் குற்றம்சாட்டிவிட்டு விலகிச் செல்வது தலைமைப் பண்பு அல்ல என்றும், அது ஏமாற்றுவேலை என்றும் தெரிவித்திருந்தார். இந்த கருத்து முதல்வர் விஜய்யை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் இருப்பதாக சிலர் கருத்து தெரிவித்ததால் சர்ச்சை ஏற்பட்டது.
“பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வாங்க!”
இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கூல் சுரேஷ், பிக்பாஸ் நிகழ்ச்சியை கடுமையாக விமர்சித்தார். மேலும், விஜய் சேதுபதிக்கு நேரடியாக “வார்னிங்” கொடுப்பதாகவும், அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற வேண்டும் என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், விஜய் சேதுபதி தொடர்ந்து நிகழ்ச்சியில் இருந்தால் மேலும் பல சர்ச்சைகளை சந்திக்க நேரிடும் என்றும் கூறினார்.
“தவெக தொண்டர்கள் சும்மா இருக்கமாட்டார்கள்”
மேலும், விஜய் சேதுபதியின் கருத்தால் விஜய் ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் கோபமடைய வாய்ப்புள்ளதாக கூல் சுரேஷ் தெரிவித்தார். குறிப்பாக பிக்பாஸ் படப்பிடிப்பு நடைபெறும் ஈவிபி கார்டன் பகுதியில் விஜய் மீது பாசம் கொண்டவர்கள் அதிகமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
இதனால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்க விஜய் சேதுபதி பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற வேண்டும் என கூல் சுரேஷ் வலியுறுத்தினார்.
அவரது இந்தப் பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் விவாதத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது
