“கல்வியே வீட்டையும் நாட்டையும் உயர்த்தும்” – முனைவர் எஸ். ஆர்ம்ஸ்ட்ராங்
கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் கல்லூரியின் பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் முனைவர் எஸ். ஆர்ம்ஸ்ட்ராங் கலந்து கொண்டு, “கல்வியே வீட்டையும் நாட்டையும் உயர்த்தும்” என்ற கருத்தை முன்னிறுத்தி சிறப்புரையாற்றினார்.

தொடர்ந்து இளநிலை மற்றும் முதுநிலை மாணவ, மாணவியர்களுக்கு பொறியியல் பட்டங்களை வழங்கி வாழ்த்தினார். இவ்விழாவில் கல்லூரியின் நிறுவனர் திருநாவுக்கரசு, தலைவர் செந்தில்குமார், இயக்குநர் அரவிந்த், கல்லூரி முதல்வர் முனைவர் பாலமுருகன், புலத் தலைவர்கள் முனைவர் ருக்மாங்கதன், முனைவர் சுந்தரச் செல்வன் மற்றும் திரு.தியாகராஜன், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பட்டம் பெற்ற மாணவ, மாணவியர்களை பாராட்டி வாழ்த்தினர்.

மேலும், பொறியியல் பட்டம் பெற்ற மாணவ, மாணவியர்களின் பெற்றோர்களும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பட்டம் பெற்ற மாணவர்கள் தங்களது கல்விப் பயணத்தின் முக்கியமான கட்டத்தை நிறைவு செய்த மகிழ்ச்சியில், பெற்றோர்களுடன் இணைந்து விழாவை சிறப்பித்தனர்.
