நடிகர் அஜித்குமாரை, நடிகை ராதிகா சரத்குமார் சில்வர் ஸ்டோன் ரேசிங் களத்தில் சந்தித்து பேசிய வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.

பிரிட்டனில் உள்ள சில்வர் ஸ்டோன் பந்தய மைதானத்தில் நடைபெறும் கார் பந்தயத்தில் அஜித்குமாரின் அணி பங்கேற்கிறது. இதற்கான போட்டி ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், இன்று சில்வர் ஸ்டோன் ரேஸ் களத்துக்கு சென்ற ராதிகா சரத்குமார், அஜித்குமாரை சந்தித்துப் பேசியுள்ளார். இருவரும் அருகருகே அமர்ந்து ஜாலியாக உரையாடும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

திரையுலகில் நீண்டகால நண்பர்களாக இருக்கும் அஜித் மற்றும் ராதிகாவின் இந்த சந்திப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

லண்டனில் த்ரிஷா 73 படக்குழு

இதற்கிடையே, நடிகை த்ரிஷாவின் 73-வது படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ராதிகா சரத்குமாரும் நடித்து வருகிறார். இதன் காரணமாக த்ரிஷா, ராதிகா உள்ளிட்ட படக்குழுவினர் லண்டனில் தங்கியுள்ளனர்.

மேலும், த்ரிஷாவுடன் செல்ஃபி எடுத்த புகைப்படத்தையும் ராதிகா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நாளை நடைபெற உள்ள கார் பந்தயத்தை பல்வேறு தமிழ் திரையுலக பிரபலங்கள் நேரில் வந்து கண்டுகளிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
0
0
0
0
0
0