பா.ஜ.க வேட்பாளர்கள் பட்டியலில் அண்ணாமலை பெயர் இல்லாதது ஏன், தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட அண்ணாமலைக்கு வாய்ப்பு வழங்கப்படாதது ஏன் என்ற கேள்வி அரசியல் களத்தில் எழுந்துள்ளது.
இந்நிலையில், பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தேர்தலில் போட்டியிட அவருக்கு சீட் வழக்காதது ஏன் என்ற கேள்விக்கு, பா.ஜ.க மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் பதிலளித்துள்ளார்.
சென்னையில் தமிழக பா.ஜ.க மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தேர்தலில் போட்டியிட சீட் வழக்காதது ஏன் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிளளித்த பியூஷ் கோயல், “பா.ஜ.க வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் மூத்ட பா.ஜ.க நிர்வாகிகள் மக்களுக்காக பல ஆண்டுாக உழைத்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மொழி கலாச்சாரம், பெருமையைப் பாதுகாப்பார்கள். அவர்கள் மக்களுக்கு முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றுவார்கள். அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெறுவார்கள். கட்சியினரின் உணர்வு, வேட்பாளரின் விருப்பத்தின் பேரில் வாய்ப்பு வழங்கப்படுகிறது. அடுத்து அமையும் இ.பி.எஸ் அரசு அனைவருக்குமான அரசாக இருக்கும்.
மேலும், “மாநிலத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல்கள், ஒவ்வொரு வேட்பாளர்களின் விருப்பம் உள்ளிட்ட பலவிஷயங்கள் வேட்பாளர் தேர்வில் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன. அண்ணாமலை பா.ஜ.க-வில் அர்ப்பணிப்புடன் பணியாற்றக்கூடியவர். அவர் குறிப்பிட்ட தொகுதி என்றில்லாமல் மாநிலம் முழுவதும் பணியாற்ற விரும்பினார்.” என்று விளக்கம் அளித்துள்ளார்.
-
நேற்றைய தினமே 16 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டதா....???? PCRபரிசோதனை முடிவு வர 3 நாட்கள் ஆகுமே...... கவனம் தேவை என நான் நினைக்கிறேன்..... குருநாதன் ஆசிரியர்
-
நேற்றைய தினமே 16 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டதா....???? PCRபரிசோதனை முடிவு வர 3 நாட்கள் ஆகுமே...... கவனம் தேவை என நான் நினைக்கிறேன்..... குருநாதன் ஆசிரியர்
-
Need need good alignment
