தேமுதிக நிறுவனத் தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாளையொட்டி, முதலமைச்சர் விஜய் அவருக்கு புகழஞ்சலி செலுத்தி நெகிழ்ச்சியுடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.விஜயகாந்தின் பிறந்தநாளான இன்று, அவரை நினைவுகூர்ந்த முதலமைச்சர் விஜய், தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து செய்தியைப் பகிர்ந்துள்ளார்.

“மனிதநேயம், துணிச்சல், தன்னலமற்ற சேவை…”

அதில், தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவருமான கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாளில் தனது “புகழ் வணக்கங்களை” செலுத்துவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.மேலும், மனிதநேயம், துணிச்சல் மற்றும் தன்னலமற்ற சேவை ஆகியவற்றை அடையாளமாகக் கொண்டவர் விஜயகாந்த் என புகழாரம் சூட்டியுள்ளார்.

திரைத்துறையில் தனக்கென தனி முத்திரையை பதித்ததுடன், அரசியலிலும் மக்கள் நலனை முன்னிறுத்திய தலைவராக விஜயகாந்த் திகழ்ந்ததாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.ஏழை, எளிய மக்களிடம் அன்பு ஏழை, எளிய மக்களிடம் அன்பும் அக்கறையும் கொண்டு, கொடையுள்ளத்துடன் பல்வேறு உதவிகளை செய்தவர் விஜயகாந்த் எனவும் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.

“புரட்சிக் கலைஞரின் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்!”  என தனது பதிவில் முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

விஜயகாந்தின் பிறந்தநாளில் அவரது அரசியல் மற்றும் திரைப்பயணத்தை நினைவுகூர்ந்து பல்வேறு அரசியல் தலைவர்களும் தொண்டர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து மற்றும் புகழஞ்சலி பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
0
0
0
0
0
0