தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையிலான ஆட்சி அமைந்து 100 நாட்கள் நிறைவடைந்ததை முன்னிட்டு, ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் எடுத்துரைக்கும் வகையில் தமிழகத்திலேயே முதல் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் கும்பகோணம் மாநகரில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

தஞ்சை கிழக்கு மாவட்ட செயலாளரும், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினரும், வேளாண்மைத் துறை அமைச்சருமான திரு. வினோத் ரவி அவர்களின் வாழ்த்துகளுடன் நடைபெற்ற இப்பொதுக்கூட்டத்திற்கு, தஞ்சை கிழக்கு மாவட்டக் கழக பொருளாளர் திரு. விஜய் சந்திரன் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கழக முதன்மைச் செய்தி தொடர்பாளரும், மு.அமைச்சருமான வைகைச்செல்வன் மற்றும்
மாநில வலைதள செய்தி தொடர்பாளர் தமிழன் ராகுல்காந்தி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

0
0
0
0
0
0