கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணைகட்ட முயற்சிக்கும், தமிழகத்திற்கு உரிய நீரை தரமறுக்கும் கர்நாடகா காங்கிரஸ் அரசை கண்டித்து தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாபெரும் கண்டனப் பேரணி - ஆர்பாட்டம், மற்றும் கண்டன பொதுக்கூட்டம், தஞ்சை ரயிலடியில் இருந்து பழைய பேருந்து நிலையம் வரை நடைபெற்றது.
இந்நிகழ்வில் தேசியச் செயலாளர் மற்றும் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் திரு.மேனன் அரவிந்த், முன்னாள் மத்திய அமைச்சர் திரு. பொன்.ராதாகிருஷ்ணன், மாநில பொதுச் செயலாளர் திரு. கருப்பு முருகானந்தம், மாநிலச் செயலாளர் திரு. அஸ்வத்தாமன், மும்பையைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் திரு.கேப்டன் தமிழ்ச்செல்வன், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட அமைப்பாளர் ஜெய் சதீஷ், தஞ்சாவூர் வடக்கு மாவட்ட அமைப்பாளர், பூண்டி வெங்கடேசன், திருச்சி நகர் மாவட்ட தலைவர் ஒண்டிமுத்து, புதுக்கோட்டை மேற்கு மாவட்ட தலைவர் ராமச்சந்திரன்,பெரம்பலூர் மாவட்ட தலைவர் திரு.முத்தமிழ்செல்வன், திருவாரூர் மாவட்ட தலைவர் V.K.செல்வம், திருச்சி புறநகர் மாவட்ட தலைவர் அஞ்சாநெஞ்சன், புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட தலைவர் ஜெகதீசன், அரியலூர் மாவட்ட தலைவர் Dr.பரமேஸ்வரி நாகப்பட்டினம் மாவட்ட தலைவர் விஜயேந்திரன், மயிலாடுதுறை மாவட்ட தலைவர் நாஞ்சில் R.பாலு மற்றும் தமிழக பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த மாநில மாவட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
