விவசாயிகள் கடன் முழுமையாக தள்ளுபடி செய்வது தொடர்பாக முக்கிய தகவலை தெரிவித்துள்ளார் வேளாண் துறை அமைச்சர் வினோத்.
தமிழ்நாடு அரசின் பகுதியளவிலான பயிர் கடன் தள்ளுபடி, மேட்டூர் அணை நீர் திறப்பு தாமதம், மேலும் விவசாயிகள் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யப்பட வேண்டும் எனும் கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படுவது குறித்து வேளாண் துறை அமைச்சர் வினோத் முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.
டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக வழக்கமாக ஜூன் 12ஆம் தேதி முதல் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும். ஆனால் இம்முறை அணையின் நீர்மட்டம் 79.56 அடியாக மட்டுமே உள்ளதால், நீர் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இதனால், வடிமுனைக் குழாய்க் கிணறுகள் மூலம் டெல்டா மாவட்டங்களில் 3 லட்சத்து 55 ஆயிரம் ஏக்கர் வரை நெல் சாகுபடி செய்ய ஏதுவாக குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். இதற்காக 77 கோடியே 50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதே போல், டெல்டா அல்லாத மாவட்டங்களில் கார், குறுவை, சொர்ணவாரி சாகுபடிக்கு 57 கோடியே 33 லட்சம் ரூபாயையும் ஒதுக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

டெல்டா விவசாயிகளுக்கு மேட்டூர் நீர் திறப்பு பிரச்சனையாக இருந்துவரும் நிலையில், பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் எனும் கோரிக்கையும் எழுந்துவருகிறது.
டெல்டா விவசாயிகளுக்கு மேட்டூர் நீர் திறப்பு பிரச்சனையாக இருந்துவரும் நிலையில், பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் எனும் கோரிக்கையும் எழுந்துவருகிறது.
குறிப்பாக கூட்டுறவு வங்கிகளில் குறு, சிறு விவசாயிகள் பெற்ற கடன்களை முழுமையாகவும், பகுதியாகவும் தள்ளுபடி செய்து தமிழ்நாடு அரசு கடந்த மே 25ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி கூட்டுறவு வங்கிகளில் குறு விவசாயிகள் ரூ. 50,000 கடன் பெற்றிருந்தால், முழுவதுமாகவும், சிறு விவசாயிகளுக்கு 50% (ரூ. 25,000) எனவும் தள்ளுபடி செய்து அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இதற்கு விவசாய சங்கங்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். குறிப்பாக தவெக அறிவித்த தேர்தல் அறிக்கையின்படி, ‘5 ஏக்கர் வரை உள்ள விவசாயிகளுக்குக் கூட்டுறவுப் பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும்; 5 ஏக்கருக்கு மேல் உள்ளவர்களுக்கு 50% தள்ளுபடி அளிக்கப்படும்’ நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இந்நிலையில், தவெக அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கிவரும் சிபிஐ, தமிழக அரசு அறிவித்துள்ள விவசாய பயிர் கடனை, முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி வரும் 29ம் தேதி, மாவட்ட தலைநகரங்களில் இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது. அனைத்து விவசாயிகளின் பயிர் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில் இன்று சென்னை ராயப்பேட்டையில் நடந்த நிகழ்ச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத்திடம் பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படுமா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அமைச்சர் வினோத், “அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகிறது.
ஆலோசனைகளும் நடந்துவருகின்றன. விரைவில் அதனை தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பார்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று சென்னை ராயப்பேட்டையில் நடந்த நிகழ்ச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத்திடம் பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படுமா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அமைச்சர் வினோத், “அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகிறது.ஆலோசனைகளும் நடந்துவருகின்றன. விரைவில் அதனை தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பார்” எனத் தெரிவித்துள்ளார்.