நாளை மறுதினம் முதல் 2 நாட்களுக்கு தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் 55 கிலோ மீட்டர் வரை காற்று வீசக்கூடும் என்பதால், இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இந்த மாதத்தில் சராசரி அளவைவிட அதிகமாக மழை பெய்யும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.
இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், தமிழ்நாட்டில் ஜனவரி மாதத்தில் சராசரியாக 12.3 மில்லிமீட்டர் மழை பெய்யும் நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் 2023-ஐ தவிர, மற்ற ஆண்டுகளில் அதிக அளவில் மழை பெய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் வரை 7 புள்ளி 8 மில்லிமீட்டர் மழை பெய்துள்ள நிலையில், இந்த ஆண்டும் அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக பிரதீப் ஜான் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல, சென்னையில் சராசரியாக 16 புள்ளி 2 மில்லிமீட்டர் மழை பெய்யும் நிலையில், நேற்று முன்தினம் வரையான காலத்தில் 30 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளதாகவும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இன்றும், நாளையும், தென் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் 60 கிலோ மீட்டர் வரை சூறாவளிக்காற்று வீசக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நாளை மறுதினம் முதல் 2 நாட்களுக்கு தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் 55 கிலோ மீட்டர் வரை காற்று வீசக்கூடும் என்பதால், இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களின் மீன்வளத் துறை அறிவுறுத்தியுள்ளது.
எனவே, மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களின் மீன்வளத் துறை அறிவுறுத்தியுள்ளது.
-
????
