அதிமுக தலைமையிலான கூட்டணியில் அன்புமணி ராமதாஸின் பாட்டாளி மக்கள் கட்சியும் இணைந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறித்துள்ளார்.
சென்னை கீரின்வேல்ஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வருகை தந்தார். 2026 சட்டசபை தேர்தலில் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதன்பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக தற்போது என்டிஏ உடன் கூட்டணியில் உள்ளது. தற்போது அதிமுக கூட்டணியில் பாமகவும் இணைந்துள்ளது. அன்புமணி ராமதாஸ் எங்கள் கூட்டணியில் இணைந்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை முடிந்த பின் அறிவிக்கப்படும் என்றார். இருகட்சிகளும் இணைந்து இந்த கூட்டணியை அமைத்துள்ளோம் என்றார். ராமதாஸ் உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தீனர்களா என்ற கேள்விக்கு பதில் அளிக்காமல் எடப்பாடி பழனிசாமி சென்றுவிட்டார்.
