தஞ்சாவூர்: கும்பகோணம் அடுத்த தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயிலில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மனைவி சாமி தரிசனம் செய்தனர். தொல்லியல் துறையினர் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலில் கலை நயத்துடன் நுணுக்கம் மிகுந்த சிற்பங்களை பார்வையிட்டு அதன் விளக்கத்தை கேட்டறிந்தனர். 

அப்போது தொல்லியல் துறை அதிகாரிகள் மழை நீர் தேங்காதவாறு மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து விளக்கம் அளித்தனர். தொடர்ந்து சுவாமிமலை சுவாமிநாத கோயிலில் தரிசனம் முடித்துக்கொண்டு கங்கைகொண்ட சோழபுரம் புறப்பட்டுச் சென்றார். வரும் 2-ம் தேதி வரை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு செல்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
12
3
0
0
0
0